spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் கட்டுப்பாடற்ற மது விற்பனை"- அண்ணாமலை குற்றச்சாட்டு!

“தமிழகத்தில் கட்டுப்பாடற்ற மது விற்பனை”- அண்ணாமலை குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கட்டுப்பாடற்ற மது விற்பனை"- அண்ணாமலை குற்றச்சாட்டு!

we-r-hiring

தமிழகம் முழுவதுமே கட்டுப்பாடற்ற மது விற்பனையால் கொலை குற்றங்கள் தொடர்கின்றன என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இளமை தோற்றத்திற்கு தீவிர சிகிச்சை…. உருவ கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லெஜெண்ட் சரவணன்!

இது குறித்து அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில், தனது விவசாய நிலத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரில் 2 சிறார்களும் உள்ளனர் என்பது வேதனைக்குரியது.

தமிழகம் முழுவதுமே கட்டுப்பாடற்ற மது விற்பனையால், கொலைக் குற்றச் சம்பவங்கள் தொடர்கின்றன. பல்லடம் அருகே, குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட ஒரு குடும்பத்தையே, மது போதையில் ஒரு கும்பல் கொலை செய்த சம்பவத்தின் சுவடு மறையும் முன்னரே, மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது, தி.மு.க. அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.

விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்….. நடிகர் சங்கம் சார்பில் கார்த்தியின் அதிரடி அறிவிப்பு!

உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை செய்யும் தி.மு.க. அரசு, குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், கும்பலாக அமர்ந்து மது அருந்துவதைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானால் என்ன, சாராய ஆலைகள் நடத்தும் தி.மு.க.வினருக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த ஆபத்தான போக்கு.

தங்கள் கட்சியினருக்கு வருமானம் என்ற ஒரே நோக்கத்திற்காக, மது விற்பனையால் தொடரும் குற்றச் சம்பவங்களையும், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும், தடுக்க தி.மு.க. அரசு தவறினால், இதனால் ஏற்படும் விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ