Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக்கில் ரூபாய் 467 கோடிக்கு விற்பனை!

டாஸ்மாக்கில் ரூபாய் 467 கோடிக்கு விற்பனை!

-

- Advertisement -

 

TASMAC - டாஸ்மாக்

தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 11, நவம்பர் 12 ஆகிய இரண்டு நாட்களில் ரூபாய் 467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!

தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 11- ஆம் தேதி ரூபாய் 221 கோடிக்கும், நவம்பர் 12- ஆம் தேதி ரூபாய் 246 கோடிக்கும் மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டலத்திலும், தீபாவளியன்று திருச்சி மண்டலத்திலும் அதிகளவில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்களை எதிராக ஐ.நா.வில் தீர்மானம்!

கடந்த நவம்பர் 11- ஆம் தேதி மதுரை- ரூபாய் 52.73 கோடிக்கும், சென்னை- ரூபாய் 48.12 கோடிக்கும், கோவை- ரூபாய் 40.20 கோடிக்கும், திருச்சி- ரூபாய் 40.02 கோடிக்கும், சேலம்- ரூபாய் 39.78 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. நவம்பர் 12- ஆம் தேதி திருச்சி- ரூபாய் 55.60 கோடிக்கும், சென்னை- ரூபாய் 52.98 கோடிக்கும், மதுரை- ரூபாய் 51.97 கோடிக்கும், சேலம்- ரூபாய் 46.62 கோடிக்கும், கோவை- ரூபாய் 39.61 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

MUST READ