
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் கடந்த 1973- ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 55 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீதர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர், இந்நிலையில், கோவிலின் மிக அருகாமையில் கோவிலின் எதிர்ப்புறமே புதிதாக அரசு டாஸ்மாக் மதுபான கடையைக் கொண்டு வந்துள்ளது இதனை எதிர்த்து அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், பொதுநல சங்கம் என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசு அதிகாரிகளிடம் மனுக்களை அளித்துள்ளனர்.
வித்தியாசமான லுக்கில் நரேன்….. புதிய பட பர்ஸ்ட் லுக் அறிவிப்பு!
எனினும் அரசு மதுக்கடையை மூடப்படாததால், பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஸ்ரீதர பெருமாள் கோவிலில் பொதுமக்கள் அனைவரும் அரசு அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்கள் அத்தனையும், கடவுளின் முன்பு வைத்து பெருமாளே மதுபானக் கடையை மூடிவிடவும், பெருமாளே டாஸ்மாக் கடையை மூடவும் என கோஷங்களை எழுப்பி, ஸ்ரீதர பெருமாளிடம் மனுவை வைத்து வழிபட்டனர்.
இதுகுறித்து பட்டாபிராம் மக்கள் கூறுகையில், “ஆவடி பட்டாபிராம் 15- ஆவது வார்டு பெண்கள் கோவிலுக்கு வருவது வெட்க தலைகுனிவோடு வருவதாக அமைந்துள்ளது. எதிரிலே அமைந்துள்ள மதுபானக் கடையில் ஆண்கள் குடித்துவிட்டு அங்கேயே சுற்றித் திரிவதால் பெண்கள், பள்ளி குழந்தைகள், கோவிலுக்கு வர தயக்கம் ஏற்படுகிறது. தயவுசெய்து மதுபானக் கடையை அகற்ற வேண்டும்.
‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் மணிரத்னம் பட ஹீரோவா?….. வெளிவந்த ரகசியம்!
திருக்கோவிலின் அருகே எதிரிலே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் பொதுநலச் சங்கங்கள் இணைந்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மனுக்களை அளித்து அவர்களின் இல்லங்களிலும் சென்று அளித்து எவ்வித மாற்றமும் ஏற்படாத சூழ்நிலையில் வேறு வழியே இன்றி ஸ்ரீதர பெருமாள் இடமே மனுவை அளித்து வினோதமாக வழிபட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி பெருமாளயே நம்பி இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.