Homeசெய்திகள்தமிழ்நாடுஆசிரியர் சஸ்பெண்ட்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ஆசிரியர் சஸ்பெண்ட்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

 

"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அரசுப் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரியைப் பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இனிமேல் பைக் டாக்சிகள் எதுவும் ஓடாது- தடை அறிவிப்பு..!!

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு கட்டுரைகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் ஆசிரியை உமா மகேஸ்வரி, இல்லம்தோறும் கல்வி திட்டத்திற்கு பல நூறு கோடி ரூபாய் வீணாக செலவழிக்கப்படுவதாகவும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால் கல்வி மேம்பாடு சிறப்பாக இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி பணி சிறக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஆசிரியர் தெரிவித்த கருத்தை ஆராய்ந்து அதனை சீர் செய்வதைவிடுத்து, பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ரிஸ்க் எடுக்காத ராகுல் காந்தி….!! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இதோ..!!

ஆசிரியர் உமா மகேஸ்வரிக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

MUST READ