Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞரின் 6-வது நினைவுநாள்... திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

கலைஞரின் 6-வது நினைவுநாள்… திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

-

முத்தமிழறிஞர் கலைஞரின் 6-வது நினைவுநாள் அமைதிப்பேரணியில் அணி திரள்வோம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களின் ஒருவன் மடலில், என்றும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றலாம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 6-வது நினைவு நாள், ஆகஸ்ட் 7-ஆம் நாள்உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என தெரிவித்துள்ளார். கலைஞரின் நினைவிடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நடைபெறுகிற முதல் அமைதிப் பேரணி இது, என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் இருப்பது கலைஞரின் நினைவிடம் அல்ல தாஜ்மஹால்...... நடிகர் ரஜினிகாந்த்!

‘கலைஞர் உலகம்‘ எனும் அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்கள் அமைந்துள்ள இடத்தை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர் என்றும், கலைஞர் உலகம் எனும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, தங்கள் தலைமுறையை வாழவைத்த தலைவருக்குத் தமிழர்கள் நன்றிக் காணிக்கை செலுத்துகின்றனர். நம் உயிர் நிகர்த் தலைவருக்கு நாமும் நம் நன்றிக் காணிக்கையைச் செலுத்துவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திமுக அலுவலகங்களில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி நன்றியினைச் செலுத்துங்கள் என்றும், உடன்பிறப்புகள் அவரவர் வீடுகளில் தலைவர் கலைஞருக்கு நன்றியை செலுத்துங்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடடுக் கொண்டுள்ளார். மேலும்,என்றென்றும் அவர் நம் உள்ளத்திற்குத் தரும் உத்வேகத்துடன் நம் இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம். மக்கள் பணியாற்றித் தொடர் வெற்றிகளைக் குவிப்போம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MUST READ