spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த வடமாநில மாணவியின் சாதனை…

அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த வடமாநில மாணவியின் சாதனை…

-

- Advertisement -

பீகார் மாநில மாணவி ஜியாகுமாரி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளியில் பயின்று தமிழில் 93 மதிப்பெண் பெற்று மொத்தம் 467 மதிப்பெற்று அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த வடமாநில மாணவியின் சாதனை… பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஜியா குமாரி பால்லாவரம் கௌவுல் பஜார் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று பொதுத் தேர்வில் 467 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழில் 93 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 99, கணிதவியலில் 89, அறிவியலில் 87, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு தந்தையின் வேலைவாய்ப்புக்காக தமிழகம் வந்த நிலையில் பள்ளி பருவம் தொடங்கியது. அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் தான் பயிலவேன் என கூறிய ஜியா குமாரி, தனக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை இருப்பதாகவும் அவர்களும் தமிழ் வழிக்கல்வியையே பயின்று வருகின்றனர் என்றும் கூறியுள்ளாா். கௌவுல் பஜார் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று 467 மதிப்பெண் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

we-r-hiring

தனது தந்தை வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து எங்களை படிக்க வைக்கிறார். பள்ளியில் ஆசிரியர்கள் மிகுந்த அக்கறையுடன் பாடம் சொல்லித்தருவதாகவும், அரசின் திட்டங்களான நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கல்வி கற்க பெறும் உதவியாக இருந்தது.  +1 மற்றும் +2 பயின்று நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவராக வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் அவர் கூறினார்.

மேலும், தனது மகள் சிறுவயது முதல் ஆர்வமாக பயிலகூடிய மாணவி தான். தனது கணவனின் வேலைக்காக பிகாரில் இருந்து சென்னை குடிபெயர்ந்து அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறோம். அதிக மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என ஜியா குமாரியின் தாய் கூறினார்.

சக மாணவிகளை போலவே இவரும் சிறப்பாக பயின்றார். பள்ளிக்கு விடுப்பு எடுக்காமலேயே எந்த தேர்வுக்கும் விடுப்பு எடுக்காமலும் வகுப்புக்கு தவறாமல் கலந்து கொள்வார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்வழிக் கல்வியை எளிதாகவே கற்றுக்கொண்டதன் மூலம் இந்த மதிப்பெண் பெற்றுள்ளதாக அவரது ஆசிரியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கௌவுல் பஜார் என்ற சிறிய கிராமத்தில் பீகார் மாநிலத்திலிருந்து குடிப்பெயர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளது இந்த கிராமத்திற்கே பெருமை என அப்பகுதிவாசிகள் தெரிவித்தனா். மேலும் இந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் +1 + 2 பயிலும் வகையில் அவா்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி தர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனா்.

வடமாநில மாணவி அரசு பள்ளில் பயின்று சிறப்பான மதிப்பெண் பெற்றதால் ஊர் சார்பாகவும், பள்ளி சார்பாகவும் சால்வை அணிவித்து, மாலை அணிவித்து, கேக் வெட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த மாணவியின் உயர்கல்விக்கு தேவையான உதவிகளை ஊர் சார்பாக வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏழு குழுக்கள்…ஒன்றிய அரசு நடவடிக்கை…

MUST READ