Homeசெய்திகள்தமிழ்நாடுகாதலியின் அம்மாவை கழுத்தை நெறித்து கொன்ற காதலன் ‌: நடத்தை சரியில்லாததை தட்டி கேட்டபோது நடந்த விபரீதம்.

காதலியின் அம்மாவை கழுத்தை நெறித்து கொன்ற காதலன் ‌: நடத்தை சரியில்லாததை தட்டி கேட்டபோது நடந்த விபரீதம்.

-

காதலியின் அம்மாவை கழுத்தை நெறித்து கொன்ற காதலன் ‌: நடத்தை சரியில்லாததை தட்டி கேட்டபோது நடந்த விபரீதம்:அம்மாவை கொன்ற காதலனை காப்பாற்ற முடிவு செய்த மகள்:பிரேத பரிசோதனை அறிக்கையால் காதலனோடு போலீசில் சிக்கியது எப்படி…..????

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஆதி பில்டர்ஸ் நகர் பகுதியில் வசிப்பவர் மேனகா (44), இவரது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவரின் மகள் தீபிதாவோடு அப்பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குடிவந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி மேனகாவின் தந்தைக்கு தீபிதாவின் காதலனான தினேஷ் பாலா போன் செய்து அத்தைக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாகவும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்து அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சித்தோடு போலீசார் மேனகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் மேனகா கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

தொடர்ந்து உஷாரான போலீசார் சம்பவத்தன்று உடனிருந்த தீபிதாவின் காதலனான தினேஷ் பாலாவை விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்தனர். அப்போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

அதில் இறந்த மேனகா மற்றும் அவரின் மகள் தீபிதா திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் வசித்து வந்துள்ளனர், ‌ தீபிதா ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ படித்த போது அவருடன் படித்த ஈரோடு, ஆதி பில்டர்ஸ் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பாலாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

தினேஷ் பாலாவும் தீபிதாவும் ஒரே சமூகத்தினர் என்பதன் காரணமாக மேனகா இவர்களின் காதலுக்கு செவி சாய்த்து உள்ளார்.தொடர்ந்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தற்போது இருவரும் எம்பிஏ தொலைதூர கல்வி மூலம் படித்து வருகின்றனர்.

இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் செய்வதாக நிச்சயமும் செய்துள்ளனர்.தினேஷ் பாலா படித்துக் கொண்டே விசுவல் மீடியாவில் ப்ராஜெக்ட் வொர்க் செய்து கொடுத்து வந்துள்ளார்.இந்த நிலையில் கணவனை இழந்த மேனகா,கணவனின் உறவினரான கார்த்தி என்பவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தீபிதா மன உளைச்சலில் இருந்துள்ளார், இது குறித்து அடிக்கடி தனது காதலனான தினேஷ் பாலாவிடம் தெரிவித்து ‌ அழுது புலம்பியுள்ளார்.

தொடர்ந்து தினேஷ் பாலா காங்கேயத்தில் இருந்தால் தானே இதுபோல் நடக்கிறது, எனவே உன் அம்மாவை அழைத்துக் கொண்டு எனது வீட்டின் அருகே வந்துவிடு இங்கே வாடகைக்கு வீடு பார்த்து குடி வைத்து விடலாம் என தெரிவித்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காங்கேயத்தில் இருந்து தீபிதா மற்றும் அவரது தாயார் மேனகாவை அழைத்துக் கொண்டு தனது வீட்டின் அருகிலேயே வீடு பார்த்து தினேஷ் பாலா குடி வைத்துள்ளார்,

தொடர்ந்து மேனகா இங்கே குடிவந்த போதிலும் கார்த்தி இங்கேயும் வந்து சென்றுள்ளார், இதனை பார்த்த தீபிதா திரும்பவும் தனது காதலனான தினேஷ்பாலாவிம் தெரிவித்து அழுதுள்ளார்,

தொடர்ந்து தினேஷ் பாலா இது குறித்து தான் அத்தையிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார், இதற்கிடையே சம்பவத்தின் முன்தினம் மேனகாவின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததன் காரணமாக மேனகா மற்றும் தீபிதா அவர்களை பார்க்க  சென்னிமலைக்கு சென்றுள்ளனர், தொடர்ந்து தீபிதா அங்கேயே தங்கிவிட மேனகா மட்டும் வீடு திரும்பியுள்ளார், ‌

தொடர்ந்து சம்பவத்தன்று 23-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மேனகாவிடம் தினேஷ் பாலா சென்று பிப்ரவரி மாதம் தனக்கும் தங்களின் மகளுக்கும் திருமணம் நடைபெற உள்ளது இந்த நிலையில் தாங்கள் இப்படி இருந்தால் எப்படி என கேட்டுள்ளார், அப்போது இது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என சொல்லி மேனகா, தினேஷ் பாலாவின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ் பாலா அவரின் கழுத்தை நெறித்து கொண்றுள்ளார்.

காதலியின் அம்மாவை கழுத்தை நெறித்து கொன்ற காதலன் .
தீபிதா, தினேஷ் பாலா

தொடர்ந்து செய்வதறியாத நின்ற தினேஷ் பாலா இதுகுறித்து தனது காதலியான தீபிதாவிடம் தெரிவித்துள்ளார்.தீபிகா தனது தாய்க்கு ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் இருப்பதை பயன்படுத்தி ஹார்ட் அட்டாக் என தெரிவித்து விடலாம் என அவருக்கு ஐடியா கொடுத்துள்ளார்.அதன் பெயரில் தினேஷ் பாலா ஹார்ட் அட்டாக் என கூறி கொலையில் இருந்த தப்பிக்க நினைத்துள்ளார்.இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் மேனகா கொலை செய்யபட்டது உறுதி செய்யப்பட்டதை எடுத்து தினேஷ் பாலா சிக்கிக்கொண்டார்..

தொடர்ந்து கொலை செய்த தினேஷ் பாலா மற்றும் அதற்கு உதவிய மகள் தீபிதா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த சித்தோடு போலீசார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ