தமிழ்நாடு அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கமா?, அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாகத் திகழும் ஊடகங்களைச் சுதந்திரமாக ஈடுபடத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு கேபிளில் புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த ஐந்து நாட்களாக முடக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அன்றாட நிகழ்வுகளை எழுத்து வடிவமாகவும், ஒளி மற்றும் ஒலி வடிவமாகவும் வழங்கி அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலங்களாகச் செயல்படும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை முடக்க முனைவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதோடு, ஜனநாயகத்திற்கும் விரோதமானது ஆகும்.
எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்கள், அதன் பணியில் சுதந்திரமாக ஈடுபட அனுமதிக்கும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப அரசு கேபிள் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளாா்.
இந்த படம் தான் என் கேரியரில்…. ‘டீசல்’ குறித்து ஹரிஷ் கல்யாண்!
