அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அமுல்படுத்தும் நோக்கமாக பள்ளிக் கல்வித் துறையின் ”வாட்டர் பெல்” குறியீடு அறிமுகம்.தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் உடல்நலனை காக்கும் வகையில் தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்த ”வாட்டர் பெல்” பயன்படுத்தி மாணவர்களிடையே தண்ணீர் குடிப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதில், தினமும் காலை 11 மணிக்கும், மதியம் 1 மணிக்கும் ”வாட்டர் பெல்” நேரம் வழங்கப்பட வேண்டும். 2 முதல் 3 நிமிடங்கள் வரை மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்கபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீர் மரணம்…சோகத்தில் திரையுலகம்…