spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதற்குறிகள் கிடையாது... ஏன்டா தொட்டோம் என நினைச்சி ஃபீல் பன்ன போறீங்க... மக்கள் சந்திப்பில் சீறிய...

தற்குறிகள் கிடையாது… ஏன்டா தொட்டோம் என நினைச்சி ஃபீல் பன்ன போறீங்க… மக்கள் சந்திப்பில் சீறிய விஜய்!

-

- Advertisement -

தவெக தொண்டர்கள் தற்குறிகள் அல்ல, அவர்கள் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சரியக் குறிகள் என்று அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், தமிழக வெற்றிக கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசிய போது கூறியதாவது:- காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணலை கொள்ளையடித்திருக்கின்றனர். இதன் மூலம் சுமார் ரூ.4,730 கோடி வரை கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. அண்ணா தொடங்கிய கட்சி இன்று என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா? கேள்வி கேட்பதை நிறுத்தப் போவதும்  இல்லை. நாங்கள் அண்ணா கூறிய மக்களிடம் செல் என்கிற கொள்கையை பின்பற்றி பயணிக்கிறோம். ஆனால் அவர்கள் அண்ணாவை மறந்துவிட்டார்கள். திமுகவை சேர்ந்தவர்கள் நம்மை கொள்கை இல்லாதவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போதே அது ஒரு கூத்தாடி கட்சி. எம்ஜிஆருக்கு பின்னால் அவ்வளவு மக்கள் திரண்டு நின்றபோது அது ஒரு கூத்தாடி கும்பல் என்று சொன்னார்கள். நடிகர் கட்சி என்று சொன்னார்கள். நடிகர் கட்சி என்று சொன்னவர்கள் எல்லாம் எம்ஜிஆரிடமே போய் சேர்ந்தார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவரிடம் தான் போய் சேர்ந்தது. இந்த வரலாறு அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். அதனால் தான் 53 வருஷமாக, கூத்தாடி, நடிகர் கட்சி என்று ஒரே கதறல்கள். மர்மயோகி படத்தில் என்கிற படத்தில் எம்ஜிஆரின் கதாபாத்திரத்தின் பெயர் கரிகாலன். அதில் எம்ஜிஆர் குறி வைத்தால் தவற மாட்டேன். தவறும் என்றால் குறியே வைக்க மாட்டேன் என்று சொல்லுவார்.  இதெல்லாம் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் நன்றாக இருக்கும். ஏன்டா இந்த விஜயை தொட்டோம். ஏன்டா விஜய்கூட இருக்குற இந்த மக்களை தொட்டோம் என நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ணப் போறீங்க.

வாக்களிக்கும் மக்களை தொடர்ந்து தற்குறிகள் என்று கூறி வருகிறார்கள். நாம் தற்குறி என்றால், இவ்வளவு வருடம் நம்மிடம் ஓட்டு வாங்கிய அவர்கள் யார்? இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தான், வாழ்நாள் முழுக்க விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்க அரசியலையே கேள்வி குறியாக்க போறாங்க. இவங்க எல்லாம் தற்குறிகள் கிடையாது. தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சரியக்குறி. தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி. சும்மா லாஜிக்கே இல்லாமல் தற்குறி தற்குறி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ