Homeசெய்திகள்தமிழ்நாடுதிராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்... த.வெ.க தலைவர் விஜய் விமர்சனம்

திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்… த.வெ.க தலைவர் விஜய் விமர்சனம்

-

நாட்டையே பாழ்ப்படுத்துற பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தங்களின் கொள்கை எதிரி என்றும், திராவிட மாடல் என்று தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற குடும்ப, சுயநல கூட்டம் தான் தங்களது அடுத்த எதிரி என்றும் விஜய் காட்டமாக தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற த.வெ.க மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் சுமார் 48 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது பேசிய விஜய், நம் கொள்கைக்கு எதிராக மக்களை சாதி, மதம், பாலினம், இனம் , மொழி, ஏழை, பணக்காரன் என்று சூழ்ச்சி செய்து ஆளும் பிளவுவாத அரசியல் சிந்தாந்தம் தான் நமக்கு எதிரியா? என்றும், அப்படியென்றால் நமக்கு ஒரு எதிரி மட்டும் தானா? நமக்கு இன்னொரு கொள்கை இருக்கே. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பது தான் அது என்றும் தெரிவித்தார். ஊழல் என்பது வைரஸ் மாதிரி என குறிப்பிட்ட விஜய்,  பிளவுவாத அரசியல் செய்றவங்க தான் எங்கள் கட்சியில் முழுமுதல் கொள்கை எதிரி என்றும் தெரிவித்தார்.

ஊழல் கபடதாரிகள் தான் நம்மை ஆட்சி செய்து வருவதாகவும், நமது ஒரு எதிரி பிளவுவாத அரசியல். இன்னொரு எதிரி ஊழல் கபடதாரிகள். இங்கு யார் ஆட்சிக்கு வரவேண்டும் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நமது மக்களுக்கு தெரியும் என்றும் விஜய் கூறினார்.

தமிழக மக்கள் மதத்தை கடந்து ஒன்றுசேருவார்கள். இங்கு சாதி இருக்கும். ஆனால் அது சைலண்டாதான் இருக்கும் என தெரிவித்த விஜய், சாதியை வைத்து அரசியல் செய்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், இங்கு ஒரு கூட்டம் ரொம்ப நாளா ஒரே பாட்டை பாடிகிட்டு.. யாரு அரசியலுக்கு வந்தாலும் அவங்க மேல ஒரு சாயத்தை பூசிக்கிட்டு.. பூச்சாண்டி காட்டிகிட்டு… மக்களை ஏமாத்திகிட்டு.. அவங்களுக்கு எப்ப பாத்தாலும் பாசிசம் பாசிசம் பாசிசம் அவ்ளோ தான் என சாடினார்.

மேலும் ஒற்றுமையாக இருக்குற நம்ம மக்கள் மத்தியில சிறுபான்மை, பெருபான்மைனு பிரிவினை பயத்தைகாட்டி புல்டைம் சீனு போடுவதாக விமர்சித்த விஜய், அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா? என்றும் கேள்வி எழுப்பினார். நீங்களும் அவங்களுக்கு கொஞ்சம்கூட சளைக்காதவங்க தான் என்றும், மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சினு சொல்லி மக்களை ஏமாற்றுவதாகவும் சாடினார். இனி உங்களை எதிர்க்கறவங்களுக்கு அந்த கலரை பூசுறது, இந்த கலரை பூசுறதுனு என்னதான் நீங்க மோடிமஸ்தான் வேலையை செஞ்சாலும் ஒன்னும் நடக்கபோறது இல்ல என்றும் விஜய் பதிலடி கொடுத்தார்.

தங்கள் கட்சிக்கு தாங்கள் முடிவு பண்ணிருக்க கலரை விட வேற எந்த கலரையும் யாரும் பூச முடியாது, தங்களது கோட்பாடே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் என்று குறிப்பிட்ட அவர், இதுயாருக்கு எதிரான கொள்கைனு சொல்லியா உங்களுக்கு தெரிய வேண்டும் என கூறினார். மேலும், இந்த நாட்டையே பாழ்ப்படுத்துற பிளவுவாத அரசியல் செய்றவங்க தான் தங்களின் கட்சியில் முழுமுதல் கொள்கை எதிரி என்றும், அடுத்து திராவிட மாடல்னு சொல்லிக்கிட்டு பெரியார், அண்ணா பேரை வைச்சி தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற குடும்ப, சுயநல கூட்டம் தான் நமது அடுத்த எதிரி என்றும் விஜய் தெரிவித்தார்.

MUST READ