spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு!

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு!

-

- Advertisement -

 

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு!

we-r-hiring

திருவள்ளுவர் தினத்தையொட்டி, அய்யன் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் மற்றும் மைலோன் புட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் தமிழ் சங்க விழா பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் மீனாட்சி குமார், ம.தி.மு.க. வழக்கறிஞர் அந்திரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு திருவள்ளுவர் தினத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.

திருக்குறள் ஒப்புவித்தல்

ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் கல்லூரி மாணவிகள்!

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், பரதநாட்டியம் மற்றும் தமிழ் பாரம்பரிய கலையான சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் காண்போரை வெகுவாகக் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து திருவள்ளுர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவித்தல், ஒட்டப்பந்தயம்,சாக்கு பை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பரிசுகள் மற்றும் திருக்குறள் புத்தகங்களை வழங்கி பாராட்டினர்.

திருக்குறள் ஒப்புவித்தல்

குறைந்த நேரத்தில் பைபிளில் உள்ள 100 வசனங்களை கூறி 2 சிறுமிகள் சாதனை!

இந்த நிகழ்ச்சியில், அய்யன் திருவள்ளுவர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

MUST READ