spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் 100% பாஜக வெற்றிக்கு வாய்ப்பு இல்லை - திருமாவளவன் பேட்டி!

தமிழ்நாட்டில் 100% பாஜக வெற்றிக்கு வாய்ப்பு இல்லை – திருமாவளவன் பேட்டி!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் 100% பாஜக வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

we-r-hiring

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படக் கண்காட்சி விழா நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், . I.N.D.I.A. கூட்டணி வெல்லப் போகிறது. என பிரதமர் நரேந்திர மோடியே உண்மையை ஒத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் 100% பாஜக வெற்றிக்கு வாய்ப்பு இல்லை. தேர்தல் முடிவு கருத்துகணிப்புகளை பொருட்படுத்தவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு எடுக்கப்படும். அதன் முடிவு தெரியும். விரைவில் இந்தியாவை சூழ்ந்துள்ள இருள் அகன்று, ஜூன்4-ல் புதிய விடியல் மலரும்” என்றார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என அவர் இவ்வாறு பேசினார்.

 

MUST READ