spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிதம்பரம் தொகுதியில் போட்டியிட வேட்பமனு தாக்கல் செய்தார் திருமாவளவன்!

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வேட்பமனு தாக்கல் செய்தார் திருமாவளவன்!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்

we-r-hiring

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் தனது வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கான படிவத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார்.அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சிலர் உடனிருந்தனர். இந்நிலையில் விசிக சார்பில் பானை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தது. இதனை தேர்தல் ஆணையம் மறுக்கவே, உயர்நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்திருந்தார். அதற்கான தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது.

MUST READ