Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம் ஏற்ற ஏற்பாடு – சிஆர்பிஎப் பாதுகாப்பில் பொதுமக்கள்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம் ஏற்ற ஏற்பாடு – சிஆர்பிஎப் பாதுகாப்பில் பொதுமக்கள்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம் ஏற்ற ஏற்பாடு: சிஆர்பிஎப் பாதுகாப்பில் இந்து, இஸ்லாமிய மக்கள் மலைக்குச் செல்ல அனுமதி!திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம் ஏற்ற ஏற்பாடு – சிஆர்பிஎப் பாதுகாப்பில் பொதுமக்கள்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள கல் தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மலை முழுவதும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள சிஆர்பிஎப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏற்கனவே 11 பேர் கொண்ட சிஆர்பிஎப் குழுவினர் மலைக்குச் சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும், தீபம் ஏற்றப்பட உள்ள கல் தூணுக்கும் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் இரு தரப்பினரும் மலை உச்சிக்குச் சென்று வருகின்றனர்.

மலைக்குச் செல்லும் பொதுமக்கள் காவல்துறையினரின் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மலைப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த கார்த்திகை தீபத் திருநாளின்போது திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5,618 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், இன்று ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையிலான காவல்துறையினரே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சிஆர்பிஎப் பாதுகாப்புடன் மலை உச்சிக்குச் செல்ல இரு சமூக மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை: தீவிர சோதனைக்குப் பின் இஸ்லாமியர்களுக்கு அனுமதி!

MUST READ