Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்..

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்..

-

சிறப்பு பேருந்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும், பொங்கல், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் தொடர் விடுமுறைகள் கிடைக்கும். இந்த நாட்களில் வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள், உயர்க்கல்வி படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று சொந்தபந்தங்களுடன் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். அவ்வாறு பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகை

2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகையில் தொடங்கி ஜன. 17ம் தேதி காணும் பொங்கல் வரை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு போகி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் , அதற்கு முதல் நாளான ஜன.13ம் தேதி ( சனிக்கிழமை) முதலே பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்குவர். ஆகையால் போகி பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13ம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் நேரிலும், டிக்கெட் முன்பதிவு மையத்திலும் , www.tnstc.in என்கிற இணையதளம் மற்றும் tnstc என்கிற செயலி வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

MUST READ