
சென்னை- திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவைக்கான கட்டணத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதில் தகராறு- இளைஞர் கொலை
வரும் செப்டம்பர் 24- ஆம் தேதி சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையேயான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த நிலையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னை எழும்பூர்-திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவைக்கான டிக்கெட் கட்டணங்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏசி சாதாரண வகுப்பு கட்டணம் ரூபாய் 1,620 ஆகவும், ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூபாய் 3,025 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“மீண்டும் கோவையில் போட்டியிடுகிறேன்”- கமல்ஹாசன் அறிவிப்பு!
இந்த வந்தே பாரத் ரயில், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தாம்பரம், விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.