spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் பரபரப்பு! தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர்

மீண்டும் பரபரப்பு! தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர்

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு உரையை படிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார். தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து, நிறைவில் தேசிய கீதம் இதுதான் மரபு என சட்டப் பேரவையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

assembly

தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது. தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது;கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்துள்ளது. சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,487 கோடி செலவில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராத உழைப்பால் அனைத்துதுறைகளில் தமிழ்நாடு அரசு முன்னேறி வருகிறது 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ளது என கூறினார்.

MUST READ