
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜன.23) நடைபெறவுள்ளது.

‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் மணிரத்னம் பட ஹீரோவா?….. வெளிவந்த ரகசியம்!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன.23) காலை 11.00 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மற்றும் ஆளுநரின் உரைக் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 28- ஆம் தேதி அன்று தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில், சில தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
அதற்கு அனுமதி அளிப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வித்தியாசமான லுக்கில் நரேன்….. புதிய பட பர்ஸ்ட் லுக் அறிவிப்பு!
எனினும், அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின், அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.