Homeசெய்திகள்தமிழ்நாடுடி.என்.பிஎஸ்.சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பிஎஸ்.சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

-

- Advertisement -

டி.என்.பிஎஸ்.சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட குரூப் 1 பதவிகளில் காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கு கடநத ஜூலை 13ஆம் தேதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து  60 ஆயிரம் பேர் எழுதினர்.

 

இந்த நிலையில், குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து குருப் 1 முதன்மை தேர்வு  வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் வரும் 6-ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

MUST READ