

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐந்து பேரை புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
“மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அதன்படி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.பி. சிவனருள், முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆர்.சரவணகுமார், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த உஷா சுகுமார், கோவை ஸ்ரீ நாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று, டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


