அனைத்து பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க பட்டு என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பான மசோதா விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்தை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்து விடுவாரா என்றும் பொன்முடி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியவது,
பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் உள்ள பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் பதிவாளர்கள், அரசு பதிவர்கள் என எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் கொடுப்பது பற்றியும், மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தேர்வு கட்டணத்தை வசூலிப்பது தொடர்பாகவும், ஒரே மாதிரியான நிர்வாகத்தை நடத்துவது குறித்தும் இன்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒரே மாதிரியாக நிர்வகிப்பது தொடர்பாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு தருகிற அறிக்கையை ஏற்று அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஒரு வார காலமாக தங்களது தேர்வு கட்டணம் அதிகரித்து விட்டது என கூறி போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்பதை நான் ஊடகங்கள் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அமைச்சர் பொன்மூடி.
அந்த மாணவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும், இனிமேல் என்ன மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து ஒரு குழு நியமித்து அடுத்த ஆண்டு முதல் எல்லா பல்கலைகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
எனவே பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பழைய கட்டணத்தையே செலுத்தி தேர்வு எழுத வேண்டும். மேலும், அடுத்த ஆண்டு முதல் எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படும் என் தெரிவித்தார்.
அரசு கல்லூரிகளில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு சில அரசு எயிடெட் பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு மாதிரியான ஊதியம் வழங்கப்படுகிறது எனவே அதை களைவதற்கு இந்த ஆலோசனை நடத்தி இருக்கிறோம்.
போலி டாக்டர் பட்டம் தொடர்பாக முன்கூட்டியே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவர்களிடம் அங்கீகாரம் பெற்று நடத்த வேண்டும். அப்படி செய்தால் தான் இது போல சர்ச்சைகள் எழாது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் என்ற மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்திருக்கிறாரே அதன் நிலை என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆளுநர் விவகாரம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான், இந்த ஒரு மசோதாவை மட்டும் அவர் நிறுத்தி வைக்கவில்லை, ஆன்லைன் சூதாட்டம் மசோதாவையும் அவர் நிறுத்தி வைத்திருக்கிறார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது அந்த அதிகாரத்தை அவர் விட்டுக் கொடுத்து விடுவாரா? என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினர்.