தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

Published by
raj
Share

 

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி இன்று ஒரு சவரன் ரூ.49,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 9 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,840 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தில் விலை ஒரு கிராம் ரூ.6150க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49,200க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.79க்கு விற்பனையாகிறது. கடந்த சில நட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை 50 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Show comments
Published by
raj
Tags: god rate Gold Gold Price gold today