Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் குறைந்தது தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

மீண்டும் குறைந்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

-

தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.48,720க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி வரையில் தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி கிராமுக்கு ரூ.6150க்கும் மற்றும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.49,200க்கும் விற்பனையானது. கடந்த 13 ஆம் தேதி தங்கம் விலையானது அதிரடியாக குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.6110க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து ரூ.48,880க்கும் விற்பனையாகி வந்தது.15ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 49,080க்கும், ஒரு கிராம் ரூ. 6,135க்கும் விற்பனையானது.

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

இந்நிலையில் இன்றைய தங்கம் விலையானது ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,090-க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.48,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையில், இன்று தங்கம் விலையானது அதிரடியாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

MUST READ