Homeசெய்திகள்தமிழ்நாடுதக்காளி விலை வீழ்ச்சி...சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகள்!

தக்காளி விலை வீழ்ச்சி…சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகள்!

-

 

தக்காளி விலை வீழ்ச்சி...சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகள்!

தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்ததால், அதனை சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டி வருகின்றனர்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் பாப்பம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி விளைச்சல் அதிகரித்த நிலையில், சந்தையில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பழனி நகராட்சி மார்க்கெட்டில் 14 கிலோ அடங்கிய தக்காளி பெட்டி 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!

இதனால் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளிக்கு 8 ரூபாய் மட்டுமே விலை கிடைப்பதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தக்காளியை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவுக்கு கூட இந்த விலை போதுமானதாக இல்லை என்று கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், தோட்டத்திற்கு அருகே சாலையோரத்தில் தக்காளி பழங்களை கொட்டி வருகின்றனர்.

MUST READ