![தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/805-1.jpg)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், 08-06-2024 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘கலைஞர் அரங்கத்தில்’ நடைபெறும். அதுபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.