
ரயில் தண்டவாளத்தில் டயர் வைத்தவர்களைக் கண்டறிய காவல்துறையினர் ஐந்து தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ரயில்வே தண்டவாளத்தில் சிலர் அண்மையில், லாரி டயரை ரயில் தண்டவாளத்தில் வைத்துள்ளனர். இந்த டயர் கன்னியாகுமரி விரைவு ரயில் எஞ்சின் பகுதியில் தட்டியதால், மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டு, ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றது.
இந்த பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை!
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஐந்து தனிப்படைகளை அமைத்து தண்டவாளத்தில் டயர் வைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.