Homeசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்துத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைத் தொடக்கம்!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைத் தொடக்கம்!

-

 

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைத் தொடக்கம்!

சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் முத்தரப்புப் பேச்சுவார்த்தைத் தொடங்கியது.

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- உச்சநீதிமன்றம் கேள்வி!

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்சங்கத்தினர் அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, குடும்ப ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, பொங்கல் பண்டிகைக்கு முன்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நீதிமன்றம் தலையிட்டதால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

இந்த நிலையில், இன்று (ஜன.19) மதியம் 12.00 மணிக்கு சென்னையை அடுத்த அம்பத்தூரில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் முத்தரப்புப் பேச்சுவார்த்தைத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு கல்வி நிலைய கூட்ட அரங்கில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அரசு உயரதிகாரிகள், சி.ஐ.டி.யூ, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!

இந்த பேச்சுவார்த்தையில் அரசுக்கும், போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ