Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டம், ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது?- டிடிவி தினகரன்

சட்டம், ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது?- டிடிவி தினகரன்

-

- Advertisement -

தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்களால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் சென்னையில் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து நான்கு ஏடிஎம்களில் நடந்த கொள்ளை, திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை, கோவையில் பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை போன்ற செய்திகள் தமிழ்நாடு காவல்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்குகின்றன.

கொள்ளை சம்பவங்களில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினரே தெரிவித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தி.மு.க. அரசு என்ன செய்யப்போகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ