spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - தேனியில் டிடிவி தினகரன் போட்டி!

அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு – தேனியில் டிடிவி தினகரன் போட்டி!

-

- Advertisement -

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

we-r-hiring

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேனி மற்றும் திருச்சி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.04.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி வேட்பாளர்களாக கீழ்காண்பவர்கள் போட்டியிடுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தேனி தொகுதியில் டிடிவி தினகரனும், திருச்சி தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ