spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரயில் பயணிகள் மீது தாக்குதல் - மேலும் இருவர் கைது

ரயில் பயணிகள் மீது தாக்குதல் – மேலும் இருவர் கைது

-

- Advertisement -

ரயில் பயணிகள் மீது தாக்குதல் – மேலும் இருவர் கைது

திருப்புர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

we-r-hiring

ரயில் பயணிகள் மீது தாக்குதல் - மேலும் இருவர் கைது

நேற்று சென்னை – ஆலப்புழா ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறிய இளைஞர்கள் சிலர் கழிவறை வாயிலில் அமர்ந்து புகை பிடித்த படியும், சத்தமாக பாடல்களை பாடியும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இதுதொடர்பாக பயணிகள் இளைஞர்களிடம் கேட்ட போது, மதுபோதையில் இருந்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பயணிகளுக்கு மிரட்டல் விடுத்துவிட்டு, திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட ரயில் பயணிகள் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். நிகழ்வின் போது ரயில்வே காவலர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் என யாரும் உதவ முன்வரவில்லை என வேதனை தெரிவித்தனர்.

ரயில் பயணிகள் மீது தாக்குதல் - மேலும் இருவர் கைது

இதையடுத்து பாதிக்கப்பட்ட ரயில் பயணிகள் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து மேலும் சிலரை தேடி வந்தனர்.

 

இந்நிலையில் சென்னை – ஆலப்புழா ரயிலில் புகைப்பிடித்த இளைஞர்கள் தட்டிக்கேட்ட பயணிகளை தாக்கி சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுனர்.

பெண் பயணியை தரக்குறைவாக பேசி இளைஞர்களை தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

https://www.apcnewstamil.com/news/crime-news/550-kgs-of-red-sandal-wood-seized-in-ambattur/87743

பயணிகளை தாக்கிய போதை இளைஞர்கள் அசோக்குமார், சுடலைராஜ், கரன் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ