
சென்னையில் பகலில் மணிக்கு 40 கி.மீ., இரவில் 50 கி.மீ. வேகத்தைத் தாண்டி வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி பவானி தேவி சாதனை!
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “சென்னையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். பகலில் 40 கி.மீ. வேகத்திலும், இரவில் 50 கி.மீ. வேகத்திலும் வாகனத்தை இயக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதற்கட்டமாக, 10 இடங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பீடு ரேடார் தொழில்நுட்ப கருவி பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு, தானியங்கி முறையில் வழக்குப்பதிவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.