விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரம விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்திவருகின்றனர்.
குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றிய, ஆதரவற்ற பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேசிய மகளிர் அணையம் நேரில் விசாரணை நடத்திவருகின்றனர்.


தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்ரா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் நடந்த சம்பவங்கள், பெறப்பட்ட புகார்கள் குறித்த விவரங்களை ஏற்கனவே விசாரணை நடத்திய போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளிடம் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்ரா கேட்டறிந்தார்.
மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் உள்ளனர்.

இரண்டு பெண்களுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என விழுப்புரம் மருத்துவமனையில் ஆய்வு செய்து ஆசிரமப் பெண்களிடம் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முழுமையான அறிக்கை விசாரணைக்கு பிறகு தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


