Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்செந்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

திருச்செந்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அத்தை @KanimozhiDMK அவர்களை ஆதரித்து திருச்செந்தூரில் இன்று வாக்கு சேகரித்தார். மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் தோல்விகளை எடுத்துரைத்து, ஏன் பாசிஸ்ட்டுகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற அடுக்கடுக்கான காரணங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினோம். நாடும் நமதே.! நாற்பதும் நமதே.!

MUST READ