Homeசெய்திகள்தமிழ்நாடுதிறமையை வெளிப்படுத்துவதற்கான தன்னம்பிக்கை மாற்றுத்திறனாளி வீரர்கள் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

திறமையை வெளிப்படுத்துவதற்கான தன்னம்பிக்கை மாற்றுத்திறனாளி வீரர்கள் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

-

- Advertisement -

258 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு 27.18 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி தொிவித்துள்ளாா்.

திறமையை வெளிப்படுத்துவதற்கான தன்னம்பிக்கை மாற்றுத்திறனாளி வீரர்கள் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

டெல்லியில் நடைபெற்ற 2-வது கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று 74 பதக்கங்கள் வென்ற 62 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உயரிய ஊக்கத்தொகை வழங்கினார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாரா விளையாட்டு வீரர்களுக்கு 1.12 கோடி ரூபாயை உயரிய ஊக்கத்தொகை காசோலைகளாக வழங்கினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் வெற்றி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த பெருமை படக்கூடிய வெற்றியாகும். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 258 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு 27 கோடியை 18 லட்சம் ரூபாய் அளவிற்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாற்று திறனாளி வீரர்களை பார்க்கும் பொழுது உத்வேகத்துடன் சேர்த்து கூடுதலாக நம்பிக்கையும் கிடைக்கின்றது.

திறமை மட்டுமே போதாது திறமையை வெளிப்படுத்துவதற்கான தன்னம்பிக்கை உங்களிடம் இருந்து தான் கிடைக்கும். மாற்றுத்திறனாளி வீரர்கள் மீது முதலமைச்சருக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு. இதுவரை 198 வீரர்களுக்கு 5 கோடியே 21 லட்சம் தமிழ்நாடு சாம்பியன் பவுண்டேஷன் மூலம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களுக்கு கை கொடுத்து தூக்கி விடவேண்டும் என்பது தான் திராவிடம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்றாா்.

தொடர்ந்து, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து இந்தோனேசியாவில் வரும் 20- 27 வரை நடைபெறவுள்ள ஸ்பீட் ஸ்கேட்டிங் சேலஞ்ச் போட்டியில் பங்குபெற உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தர்ஷனாவிற்கு 90 ஆயிரம் ரூபாய் காசோலையும், சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய மலையேற்ற சைக்கிள் (Mountain Bike) சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ள சைக்கிளிங் வீராங்கனைகள் ரமணி மற்றும் சௌபர்ணிகா ஆகியோருக்கு தலா ரூபாய் 50,000-க்கான காசோலையும் ரூபாய் 7.4 லட்சம் மதிப்பிலான நவீன சைக்கிள் மற்றும் தடகள வீரர் மாரி ஆனந்த்துக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான போல் வால்ட் உபகரணத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் மேம்பாட்டு தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணை தலைவர்கள் ராமசந்திரன், அசோக் சிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க விடுங்க..!! நீட் தேர்வால் வருமானம் பாதிக்குதா? திமுகவை சாடும் அண்ணாமலை..

MUST READ