Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்னும் 5 மாதங்களுக்குள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000- உதயநிதி ஸ்டாலின்

இன்னும் 5 மாதங்களுக்குள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000- உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை 1000 இன்னும் 5 மாதங்களுக்குள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image

we-r-hiring

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி மீசையின் பெருமையை கொஞ்சம் சொல்லட்டுமா? 7 நாட்கள் ஷேவ் பண்ணாம இருந்தா எல்லாருக்கும்தான் மீசை வரும். பாஜக என்பது கட்சி அல்ல, அது ஒரு கவர்னர் ட்ரைனிங் சென்டர்

தமிழ்நாடு மக்கள் எப்போதும் பாஜகவுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். ஓபிஎஸ் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படுவார். ஈபிஎஸ் மாநில பாஜக தலைவராக விரைவில் நியமனம் செய்யப்படுவார். பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும், குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை 1000 இன்னும் 5 மாதங்களுக்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துவருகிறார்” எனக் கூறினார்.

MUST READ