spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்துள்ளது

ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்துள்ளது

-

- Advertisement -

ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள கடைசி தேதியை டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்துள்ளது

we-r-hiring

இந்தியாவிலுள்ள அனைவருமே 10 வருட முந்தைய பழைய ஆதார் அட்டைகளே வைத்திருப்பார்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் எல்லாமே தற்போதைய அப்டேட்டுகளாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் கார்டுகள் அவசியமாகின்றன.. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், இறந்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை அனைத்துக்குமே ஆதார் கார்டு அவசியம் என்றாகிவிட்ட நிலையில் ஆதார் அட்டைகள் எந்தவிதமான பிழைகள் இருக்கக்கூடாது. பிழைகள் இருந்தால், அரசின் உதவியை பெற முடியாது.

ஆதார் அட்டையில் உள்ள முகவரி தவறாகவோ அல்லது வேறு முகவரி இருந்தாலோ  பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது . மேலும் ஆதாரில் உங்கள் விவரங்கள் சரியாக இல்லாவிட்டால், பல சிக்கல்களை உறுவாகிறது. ஆதாரை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளை தடுக்க, குறிப்பிட்ட காலத்திற்கு  ஆதார் அட்டையை  அனைவரும் அப்டேட் செய்வது கட்டாயமாகும்.. அதன்மூலம் ஆதார் கார்டு பாதுகாப்பாக இருக்கும், மோசடிகளையும் தவிற்க முடியும்.

ஆதார் கார்டைப் புதுப்பிக்க காலக்கெடு செப்டம்பர் 14ம் தேதியே முடிவடைந்துவிட்டது என்றாலும், இப்போது டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10 வருடங்கள் பழமையான ஆதார் கார்டைப் புதுப்பிக்க வேண்டுமானால், எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

ஆதார் கார்டை அப்டேட் செய்ய 2 ஆப்ஷன்கள் உள்ளது  My Aadhaar வெப்சைட்டிற்குள் நுழைந்து அப்டேட் செய்து கொள்ளலாம். அல்லது, ஆதார் சேவை மையத்துக்குச் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம். அப்படி பொதுச்சேவை மையத்துக்கு செல்வதாக இருந்தால், பெயர், போட்டோ, செல்போன் நம்பர், முகவரி போன்ற விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம்.

ஆனால் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே ஆன்லைனில் புதுப்பிப்பதாக இருந்தால், இலவசமாக செய்து கொள்ளலாம். ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடு முடிந்ததும், ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே ஆதாரை புதுப்பிப்பதற்கு கட்டணம் விதிக்கப்படும். ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய 100 ரூபாயும், மக்கள்தொகை தரவுகளுக்கு 50 ரூபாயும், ஆன்லைனில் ஆதார் பதிவிறக்கத்திற்கு 30 ரூபாயும், முகவரியைப் புதுப்பிக்க 25 ரூபாயும் வசூலிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு டிசம்பர் 14ம் தேதிக்குள் இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம்.

ஆன்லைனில் புதுப்பிக்க: – https://myaadhaar.uidai.gov.in/portal e என்ற வெப்சைட்டில் ஆதார் OTP சரிபார்ப்பு மூலம் உள்நுழைய வேண்டும். – ‘Update Demographic Data’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, நிலையை சரிபார்க்க வேண்டும். – ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். – பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பரில் பெறப்பட்ட OTP நம்பரை உள்ளிட வேண்டும்.

Update Demographic Data என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும். – இப்போது உங்களது அப்டேட் தொடர்பான ஆவணங்களை அப்லோடு செய்யலாம்  என அறிவித்துள்ளது.

#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு..!

MUST READ