
தமிழகத்தில் உள்ள 25 உழவர் சந்தைகளைப் புனரமைப்பது தொடர்பாக, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!
அரசாணையில், “கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருப்பூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகள் புனரமைக்கப்படுகின்றன. இந்த உழவர் சந்தைகளைப் புனரமைக்க சுமார் 8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்னணு சாதனங்களைப் பொருத்துதல், மின்னணு எடை, வடிகால் மறுசீரமைப்பு, கூரைப் பழுது பார்த்தல், நடைப்பாதை அமைத்தல் மற்றும் சீரமைத்தல், சுவர்களில் வண்ணம் பூசுதல் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிக்க மறந்த மக்கள்…. புன்னகை செய்வது எப்படி?- டோக்கியோவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு!
அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் ஜலகண்டாபுரம், அஸ்தம்பட்டி, எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி ஆகிய ஐந்து உழவர் சந்தைகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.