Homeசெய்திகள்தமிழ்நாடுதிருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: "கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்" – வைகோ அதிரடி விளக்கம்!

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

-

- Advertisement -

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு ‘நோபல் பரிசு’ தரப்பட வேண்டும் என்று தாம் கூறிய கருத்தை, அவர் மனம் புண்பட்டிருந்தால், திரும்பப் பெற்றுக் கொள்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு

we-r-hiring

தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, இது குறித்து வெளியிட்ட விரிவான விளக்கம் இதோ:

அதிர்ச்சியை ஏற்படுத்திய திருமாவளவன் பேச்சு: “தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையிலும், அதே நேரத்தில் திமுக கூட்டணியிலும் பங்கெடுப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். மேலும், தவேகவும் திமுகவும் அகில இந்திய அளவில் ஓரணிக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தத் தற்காப்பு வாதம் எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வட துருவமும் தென் துருவமும் எப்படி ஒன்றுசேர முடியும்? இந்த முரண்பாடான கருத்தைச் சொன்னதற்காகத்தான், வியப்பில் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று சொன்னேன். இதில் அவரைத் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு எதுவும் இல்லை” என்று வைகோ குறிப்பிட்டார்.

15 ஆண்டுகால நட்பு – வைகோ நெகிழ்ச்சி: தொடர்ந்து பேசிய வைகோ, “திருமாவளவன் அரசியலில் வளர வேண்டும் என்பதற்காக, என்னால் இயன்ற அத்தனை நிகழ்வுகளிலும் அவருக்கு நான் உதவியிருக்கிறேன். அவர் ஒரு பெரிய தலைவராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், ஒரு பெரிய நட்சத்திரமாகவும் வர வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக அவருக்கு ஊக்கமளித்து வருகிறேன். என்னால் இயன்ற அளவுக்குப் பக்கபலமாகவும் இருந்தேன்;

அதிமுக கூட்டணியில் நானும் அவரும் இருந்த காலத்திலிருந்தே, என் சக்திக்கு மீறி அவருக்குப் பக்கபலமாக நின்றுள்ளேன். அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே பயன் தரக்கூடிய வகையில் பணியாற்றி வருகிறார்” என்றார்.

மனம் புண்பட்டிருந்தால் திரும்பப் பெறுகிறேன்: “இந்தச் சொற்களை நான் சொன்ன எழுச்சித் தமிழர் திருமாவளவனின் மனம் புண்பட்டிருக்குமேயானால், எனது அந்த வார்த்தைகளை நான் முழுமையாகத் திரும்பப் பெறுகிறேன். அவர் மீது எனக்கு இம்மியளவும் கசப்போ, வருத்தமோ எதுவும் கிடையாது” என்று வைகோ தங்களது கூட்டணி மற்றும் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசினார்.

MUST READ