
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைத்துள்ள பூங்கா நிர்வாகம், பெரியவர்களின் நுழைவுக் கட்டணத்தை 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?”- இன்று தீர்ப்பு!
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைத்துள்ள பூங்கா நிர்வாகம், பெரியவர்களின் நுழைவுக் கட்டணத்தை 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது. 2020- ஆம் ஆண்டுக்கு பிறகு உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்தவும், வளர்ச்சிப் பணிகளுக்கும், நுழைவுக் கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 5 முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணாக்களுக்கான கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகைக் கட்டணமாக ரூபாய் 20 வசூலிக்கப்படும். தற்போதுள்ள சக்கர நாற்காலிக்கான கட்டணம், சைக்கிள், ரிக்ஷவுக்கான கட்டணம், டைம்- ஸ்லாட் நிறுத்துமிட கட்டண முறை ஆகியவை ரத்துச் செய்யப்படுகின்றன.
“சனாதன ஒழிப்பைத் தொடர்ந்து சொல்வேன்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
அனைத்து வகையான வாகனங்களுக்கான நிறுத்த கட்டணம் மணிக்கணக்கில், நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி வாகனக் கட்டணம் ரூபாய் 100- லிருந்து ரூபாய் 150 ஆகவும், பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூபாய் 115- லிருந்து ரூபாய் 200 ஆகவும், சஃபாரி வாகனக் கட்டணம் ரூபாய் 50- லிருந்து ரூபாய் 150 ஆகவும், வீடியோ கேமரா கட்டணம் ரூபாய் 500- லிருந்து ரூபாய் 750 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


