spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவேங்கைவயல் வழக்கு - நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

வேங்கைவயல் வழக்கு – நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

-

- Advertisement -

வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட நீரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் யாரும் பருகவில்லை என்பது அறிவியல் பூர்வமாக நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது என்று கூறிய அரசு தரப்பு வாதத்தை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயல் வழக்கு - நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

மேலும் சிபிசிஐடி தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக்கூடாது என்று இந்த வழக்கின் புகார்தாரரான கனகராஜ் என்பவர் தொடுத்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில்,அதே கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மணமேல்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூன்று பேரும்தான் குற்றம் செய்தவர்கள் என சிபிசிஐடி போலீசார் கடந்த 20ம் தேதி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

we-r-hiring

மேலும் கடந்த ஜனவரி 27ம் தேதி அன்று சிபிசிஐ போலீசார்  அவர்கள் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை சுட்டிக்காட்டி இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் புகார்தரரான கனகராஜ் கடந்த ஜனவரி 27ம் தேதி அன்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்  புகார்தாரரான தன்னிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்யவில்லை. சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்ற பத்திரிக்கையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனையே அவர் தரப்பு வழக்கறிஞர்கள் அவர்களது வாதமாக இரண்டு முறை விசாரணைக்கு வந்த போதும் நீதிமன்றத்தில் முன் வைத்தனர்.

இதேபோல் அரசு தரப்பிலிருந்து ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் குமார் இந்த வழக்கின் புகார்தாரரை இதுவரை மூன்று முறை விசாரணைக்கு அழைத்தும் அவர் ஆஜராகவில்லை. வழக்கின் விசாரணை தன்மையை சொன்னால் மட்டுமே வழக்கில் ஆஜராவதாகவும், இல்லையென்றால் வழக்கில் ஆஜராக முடியாது என்று இந்த வழக்கின் புகார்தாரர் தெரிவித்துள்ளார். ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது, அந்த வழக்கின் விசாரணை குறித்து புகார் தாரரிடம் கூற முடியாது. அப்படி கூறினால், அது வழக்கின் தன்மையை மாற்றிவிடும். மேலும் இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அறிவியல் பூர்வமாக விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர், மேலும் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து மலம் கலக்கப்பட்ட தண்ணீரை வேங்கைவயல் மக்கள் யாரும் பருகவில்லை என்றும், அந்த நீரை பருகியதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என தனது வாதத்தை முன் வைத்தார்.

இந்நிலையில் தான் அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறிய மனு தாக்கலை ஏற்று இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து இந்த நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி வசந்தி உத்தரவிட்டார். மேலும் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என்று இந்த வழக்கின் புகார்தாரரான கனகராஜ் கொடுத்த மனுவையும் தள்ளுபடி செய்து இனி வரக்கூடிய காலங்களில் இந்த வழக்கு மாற்றப்பட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் அறிவியல் பூர்வமாக விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மலம் சம்பவம் கண்டறியப்பட்ட அன்றைய தினமே அந்த தொட்டியில் போடப்பட்டது என்று விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது அதனால் அந்த தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்ட நீரை பருகியதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களும் அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியாது அதனால் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் வாதத்தை முன் வைத்தோம் எங்களது வாதத்தை ஏற்று நீதிமன்றம் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி உள்ளது மேலும் இந்த வழக்கின் புகார் தரரான கனகராஜ் கொடுத்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் சிபிசிஐடி போலீசார் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை இந்த வழக்கு நடைபெற உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் இனி வழக்கு அந்த நீதிமன்றத்தில் தான் நடைபெறும் என்றும் மேலும் குற்றப்பத்திரிகை நகல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த வழக்கு நடைபெற உள்ள நீதிமன்றத்தில் இருந்து வழங்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டு அடுத்த கட்ட நகர்வுக்கு இந்த வழக்கு செல்லும் என்று தெரிவித்தார்.

“கும்பமேளா விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்….  எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!

MUST READ