spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது"- மருத்துவமனை தகவல்!

“விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது”- மருத்துவமனை தகவல்!

-

- Advertisement -

 

vijayakanth

we-r-hiring

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு ப்ளடி ஸ்வீட்டான நியூஸ்….. லியோ ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

நுரையீரல், சளி உள்ளிட்டப் பாதிப்புகள் காரணமாக, கடந்த நவம்பர் 18- ஆம் தேதி இரவில் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே, உடல்நலப் பாதிப்புகள் உள்ளதாலும், உறுப்புகளின் செயல்பாட்டைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்காகவும் தீவிர சிகிச்சைப் பிரிவின் அனுமதித்து மருத்துவர்கள், சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தளபதி 68 படத்தின் முதல் பாடலின் படப்பிடிப்பு நிறைவு

விஜயகாந்திற்கு மூச்சு விடுவதில் லேசான சிரமம் இருப்பினும், அவர் தாமாகவே சுவாசித்து வருவதோடு உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ