spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது.....எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

“விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது…..எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

-

- Advertisement -

 

"விஜயகாந்திற்கு பத்ம்பூஷண் விருது.....எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
Photo: TN Govt

அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சிவில் நீதிபதிகளுக்கான நேர்முக தேர்வுக்குழுவில் பன்மைத்துவத்தைப் பேண வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை), ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ டி குரூஸ் (இலக்கியம்), சேஷம்பட்டி சிவலிங்கம் (கலை), நாச்சியார் (மருத்துவம்) ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.

தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான திருமதி செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சி – கேரள அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.” இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

MUST READ