சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இரட்டை ஊதிய முறையை ரத்து செய்யவேண்டும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் கட்டுப்பாட்டில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 18 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 8,446 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே நிர்வாகத்தின் கீழ் பணி செய்து வரும் நிலையில், அவர்களை இரு பிரிவாக பிரித்து ஒரு தரப்பினருக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கி வரும் சர்க்கரைத் துறை, இன்னொரு பிரிவு ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கி வருகிறது. இந்த இரட்டை ஊதிய முறையை அகற்றி அனைவருக்கும் ஒரே மாதிரியாக அரசு ஊதியம் வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.
மேலும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளர்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் போன்ற கோரிக்கைகளில் எந்தவித முன்னேற்றமோ, தீர்வோ ஏற்படவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது தேசிய முற்போக்கு திராவிட அனைவருக்கும் சமமான ஊதியத்தை கொடுத்து கோரிக்கை நிறைவேறும் வரை அனைத்து தொழிலாளர்களின் வரை அனைத்து ஆலைகளிலும் காலவரையற்ற நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கழகம் ஆதரவு அளித்திருந்தது. அரசு இனியும் மெத்தனம் காட்டாமல் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். ஜனவரி 2-ம்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அதற்கு முன்பாக ஊதிய உயர்வு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் ஜனவரி 2-ம்தேதி அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தொழிற்சங்கம் பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
