விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜையில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு, எல்.கே.சுதீஷ் நேரில் அழைப்பு விடுத்தார்.


மறைந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா வரும் டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிக சார்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து, குருபூஜை விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, விஜயகாந்த் குருபூஜை நிகழ்ச்சி மற்றும் ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்புகளின்போது தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உடனிருந்தார்.


