spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"கணினி மயமாகும் கிராம ஊராட்சிகள்"- தமிழக அரசு அறிவிப்பு!

“கணினி மயமாகும் கிராம ஊராட்சிகள்”- தமிழக அரசு அறிவிப்பு!

-

- Advertisement -

 

"கணினி மயமாகும் கிராம ஊராட்சிகள்"- தமிழக அரசு அறிவிப்பு!
Photo” TN Govt

கிராம ஊராட்சிகளில் நாளை (மே 22) முதல் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் ஆன்லைன் மூலம் பெறப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

ஏற்காட்டில் கோடை விழாவும், மலர் கண்காட்சியும் இன்று தொடங்குகிறது!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிராம ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை அமலுக்கு வருகிறது. அதன்படி, வீடு, சொத்து, குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஆன்லைனில் மட்டுமே பெற உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடத்திற்கான அனுமதி நாளை முதல் இணையதளம் மூலம் வழங்கப்படும்.

புதிய கட்டடங்களுக்கு அனுமதி பெற என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஊரகப் பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கான அனுமதி வழங்க கிராம ஊராட்சி செயலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் எந்தவொரு சேவைக்கும் கட்டணத்தை இணையம் மூலமே பெற வேண்டும்.

எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சாதனை!

கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை tnrd.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று செலுத்தலாம். அதேபோல், புதிய கட்டடங்களுக்கு அனுமதிப் பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ