Homeசெய்திகள்தமிழ்நாடு"ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு"- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!

“ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு”- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!

-

 

"ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு"- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்!

ஓட்டுப்போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

“மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “ஓட்டுப்போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு; வேட்பாளர்கள் பணம் கொடுக்கக் கூடாது; வாக்காளர்களும் பணம் வாங்கக் கூடாது. 85 வயதுக்கு மேற்பட்டோர் ஏப்ரல் 18- ஆம் தேதி வரை தபால் வாக்குகளை பதிவுச் செய்யலாம். தபால் வாக்குகளைப் பெற வாக்குப்பதிவு அலுவலர்கள் இரண்டு முறை வீட்டுக்கு வருவார்கள்.

ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய மாணவர் கைது!

இரண்டு முறையும் தபால் வாக்குச் செலுத்த முடியாதவர்கள் வாக்குப்பதிவு நாளில் நேரில் வாக்களிக்கலாம். தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. புதிய தொழில்நுட்பத்தில் உள்ள மார்க் 3 வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.” இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

MUST READ