spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதனியார் சேமிப்புக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

தனியார் சேமிப்புக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

-

- Advertisement -

 

தனியார் சேமிப்புக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!
Video Crop Image

சென்னை எண்ணூரை அடுத்த மணலியில் உள்ள தனியார் சேமிப்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

we-r-hiring

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 560 குறைவு!

வயக்காடு பகுதியில் உள்ள தனியார் சேமிப்பு குடோனில் கப்பலில் இருந்து இறக்கப்படும் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 10- க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பல்லாயிரம் டன் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இந்த சேமிப்பு குடோனில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி, சேமிப்புக் குடோன் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்து வந்த 100- க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீவிரமாகப் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ கட்டுக்கடங்காமல் 100 அடி உயரத்திற்கு எரிந்து வருவதால், இதனை அணைக்கும் பணியில் சிரமம் நிலவுகிறது.

ஆளுநர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு!

மேலும், சேமிப்பு குடோனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக, சேமிப்புக் கிடங்கில் மேற்கூரைகள் பக்கவாட்டு சுவர்கள், கடும் சேதத்தைச் சந்தித்துள்ளனர். மணலி பகுதியில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளதால் தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ