பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது அரசு பேசி தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறியுள்ளாா்.”தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களது பணி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நிரந்தரத் தன்மை கொண்ட பணியாகும்.
தமிழ்நாடு அரசின் பணி நிரந்தர சட்டப்படியும், பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதி அளித்த படியும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட இதர சட்டப்பூர்வ உரிமைகளையும் பெற தகுதியுள்ளவர்கள் என்பதை அரசு கருதிப் பார்க்க வேண்டும்.

பல்வேறு முறைகளில் கோரிக்கைகளை முன்வைத்து வந்த பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 11 நாட்களாக, தலைநகர் சென்னையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதன் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, பகுதி நேர ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகள் மீது பேசி தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறியுள்ளாா்.
திமுக கூட்டணியில் எல்லாம் நேர்மையாகவே நடைபெறுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பதிலடி