Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய அடுக்குமாடி குடியிருப்பு நிலை என்ன ? - பூச்சிமுருகன்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய அடுக்குமாடி குடியிருப்பு நிலை என்ன ? – பூச்சிமுருகன்

-

சென்னையில் கடந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 5 ஆயிரம் வீடுகள் இன்னும் விற்பனை ஆகாமலே இருக்கிறது. இந்த வீடுகள் ஏன் விற்பனை ஆகவில்லை, விற்பதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன?

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய அடுக்குமாடி குடியிருப்பு நிலை என்ன ? - பூச்சிமுருகன்அனைவருக்கும் வீட்டு வசதி என்ற அடிப்படையை குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். இதே போல பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு முன்னுரிமை வழங்கி வீட்டு உரிமையாளர்களாகவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மாற்றி வருகிறது.

சென்னை மட்டுமல்லாது கோயம்புத்தூர் திருச்சி, மதுரை போன்ற மாநகரங்களிலும்  குறைந்த விலையில் வீடுகளை வாங்குவதற்காக பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

இவ்வாறு மக்களுடைய பயன்பாட்டிற்காக கட்டப்படக்கூடிய குடியிருப்புகள் விற்பனை ஆகாமலும் இருந்து கொண்டிருக்கிறது. சென்னையில் சோழிங்கநல்லூர், அம்பத்தூர் அருகே உள்ள அய்யப்பாக்கம், கே.கே.நகர், ஜாபர்கான் பேட்டை, செனாய் நகர் போன்ற இடங்களில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 4,324 வீடுகள் விற்பனை ஆகாமல் இருப்பதாகவும், இதில் சோழிங்கநல்லூர், அய்யபாக்கத்தில்  ஆயிரக்கணக்காண வீடுகள் விற்பனை ஆகவில்லை என்கிறார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன். மேலும் கடந்த ஆட்சி காலத்தில் மக்களுடைய தேவைகளை கருத்தில் கொள்ளாமல் கட்டப்பட்டது தான் இதற்கு காரணம் என்கிறார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய அடுக்குமாடி குடியிருப்பு நிலை என்ன ? - பூச்சிமுருகன்தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தலைவர் பூச்சிமுருகன் கூறியதாவது

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக தெரிவித்தாலும், அரசு குடியிருப்புகள் தரமானதாக இருக்குமா என்ற அச்சமும், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளோடு் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது உரிய வசதிகள் இல்லை என்ற மனநிலையே இருப்பதாவும் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சோழிங்கநல்லூரில் உள்ள 1500 பிளாட் என்ற வாரியத்தின் குடியிருப்பில் வசிக்கக்கூடிய வீட்டின் உரிமையாளரிடம் கேட்கும் பொழுது, அரசால் கட்டப்படக்கூடிய குடியிருப்புகள் தரமானதாகவும், விலை குறைவு என்றாலும் கூட போதிய வசதிகள் தனியார் கட்டிடங்களில் இருப்பது போன்று இல்லை என்றே தெரிவிக்கிறார்.

மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பேருந்து, மெட்ரோ வசதிகள் உள்ள இடத்தில் தனியாரோடு போட்டி போட்டு வாரியத்தின் குடியிருப்புகள் நவீன வசதியுடனும் கட்டப்படவேண்டும். அப்போது தான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மீதுள்ள தவறான பார்வை மாறுவதோடு, கட்டப்படக்கூடிய குடியிருப்புகள் அனைத்தும் விற்பனையாகும் என்கின்றார்.

கடந்து ஆட்சியில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 25 சதவீத வீடுகளை  விற்பனை செய்து இருப்பதோடு, அனைத்து வீடுகளையும் விற்பனை செய்வதை பிரதானமான நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். இதனால் புதிய குடியிருப்புகளை கூட இந்த ஆட்சியில் குறைந்த அளவிலேயே கட்டுவதாக பூச்சி முருகன் தெரிவிக்கிறார். மேலும் ஆன்லைன் மூலமாகவும் உரிய விளம்பரப்படுத்துவதோடு, குறைந்த விலையில் விற்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசின் நோக்கம் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றுவதாக இருந்தாலும்,  உரிய வசதிகளுடன், நவீன மாற்றங்களுக்கு ஏற்றது போல வீடுகள் இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பூர்த்தி செய்தால் இன்னும் எத்தனை அடுக்குமடி குடியிருப்புகள் கட்டினாலும் விற்பனையாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள்.

MUST READ